Posts

Showing posts from June, 2017

இயற்கை மஞ்சள் தூள் விற்பனைக்கு..

நாங்கள்  விளைவிக்கும் மஞ்சளில் இருந்து வீட்டிற்கு தேவையான அளவு எடுத்து வைத்துக்கொண்டு அதனை பொடியாக்கி சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வோம். இதனை முடிந்தவரை மற்றவர்களுக்கும் சென்று சேர்க்க விரும்புகிறோம். இப்போது எங்களிடம் செல்பாஸ் வைக்காத இயற்கை உரம் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட  மஞ்சள் உள்ளது. மஞ்சள்தூள் தேவைப்படுபவர்களுக்கு அரைத்து கொடுக்கப்படும். இயற்கைக்கு மாறுவோம் இளைய தலைமுறையையாவது காப்போம்.. Contact: land2urhand@gmail.com

மஞ்சள் தூளில் - செல்பாஸ் எனும் விஷம்

மஞ்சளை தினமும் சேர்த்தால் புற்று நோயை கட்டுப்படுத்தும் என்பார்கள். ஆனால் இன்றைய மஞ்சள் பொடியை உண்பதால் அதுவே புற்று நோய் வருவதுற்கு காரணமாகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், மஞ்சள் கெடாமல் இருப்பதற்கு செல்பாஸ் எனும் மாத்திரை உபயோகப்படுத்தப்படுகிறது. மஞ்சள் பதப்படுத்தும் முறை 1. வெட்டி எடுத்த மஞ்சள் வேக வைக்கப்படும் 2. பின்னர் வெயிலில் உலர வைக்கப்படும் 3. உலர்ந்த மஞ்சளை சுற்றி உள்ள வேர்கள் நீக்கப்படும் (பாலிஷ்) 4. விலை கிடைக்கும் வரை மூட்டையில் தைத்து அடுக்கி வைக்கப்படும் இவ்வாறு வேர்கள் நீக்கப்பட்டு மஞ்சள் அதிக நாட்கள் கெடாமல் இருக்க செல்பாஸ் மாத்திரையை வைத்து அடுக்கி விடுவார்கள். இந்த மாத்திரை ஒரு விஷமாகும். இவ்வாறு சேமிக்கப்பட்ட மஞ்சள்தான் பொடியாக்கப்பட்டு கண் கவரும் படி விற்கப்படுகிறது.

மஞ்சளின் மருத்துவகுணம்!

- Vikatan Article மஞ்சளின் மருத்துவகுணம்! பாலசுப்பிரமணியன், அரசு சித்த மருத்துவர் பொங்கல் பண்டிகையில் முதன்மைப் பொருள், மஞ்சள். மங்களகரமான மஞ்சளில் மருத்துவ குணங்களும் அதிகம்.  சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்படும், ஆயிரக்கணக்கான நோய்களில், 60க்கும் மேற்பட்ட நோய்கள் மஞ்சளால் குணப்படுத்தப்படுகின்றன. மஞ்சள் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி, நச்சு எதிர்ப்புப் பொருள் என்பதால் விவசாயத்திலும் பயன்படுகிறது. கிடைக்க அரிதான கருமஞ்சள், காயகல்ப மருந்தாகப் பயன்படுகிறது.   பசுஞ்சாண நீரில் ஊறவைத்து, உலரவைத்துப் பொடித்த மஞ்சள் சமையலுக்கும், நல்லெண்ணெயில் ஊறவைத்து, உலரவைத்துப் பொடித்த மஞ்சள், சருமத்துக்கும் பயன்படுகிறது.   மெட்ராஸ் ஐ வந்தால், தூயவெள்ளைத்துணியை மஞ்சள் கலந்த நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, கண்களில் அடிக்கடி ஒற்றி எடுத்தால், கண்வலி, நீர்கோத்தல் தீரும்.   மஞ்சளைச் சுட்டு, புகையை மூக்கில் இழுத்தால் தலைபாரம், நீர்க்கோவை, தலைவலி, தும்மல், நீர்வடிதல், மூக்கடைப்பு, தொண்டைப்புண் மற்றும் கிருமித்தொற்று போன்ற நோய்கள் குணமாகும்.   மர மஞ்சளின் சாறு 200 மி.லி அளவு எடுத்து, தேன் கலந்